Posts

   கடவுள் இருக்கிறான்பா  எங்கப்பா இருக்கிறான்  கடவுளை பார்க்க போனவன்தான்  விபத்தில் சிக்கிட்டானே  கண் கண்டா தெய்வமாச்சே கல்லாயிட்டானோ  அப்புறம் ஏம்பா கல்ல   கும்பிடனும்  நம்பிக்கைதாம்ப  அப்பிடின்னா  நம்பிக்கை  மட்டும் போதுமே  ஏன் பால ஊத்தணும்  ? ?? ? ?
 எத்தனை முகம்  எத்தனை அகம் அத்தனை அகமும்  ஒம் நமசிவயா என்று சொல்லிய  டைம்        
 Mask அழகான அவள்  முகத்ததில் நீ அமர்ந்ததால் அவள் முகம்  அழகற்றது நீ என்று தொலைவாய்  என் முகம் அழகாய் தெரிய அவளுக்கு
 வானம் அவிழ்ந்துவிட்ட  அந்தி நேரம்  கானம் பாடிய  காக்கைகள்   
இசையே இசையே உனக்கு இன்னொரு பெயர் சூரியன் F. M  ஆ  ? அடிக்கடி எங்கள் நெஞ்சத்திடம் அன்பு செய்து  நாணல்  தொடுக்கிறாய் இசை மழையை  பொழியும்  பண்பலையே பசைபோல் ஒட்டிக்கொள்ளும்  காற்றலையே ஒவ்வொரு நிமிடமும்  எங்களை விசை தொடுக்கிறாய் கசை அடி  விழுந்தாலும் எங்களின் தசை நார் கிழிந்தாலும் விலக மாட்டோம் உன்னை விட்டு காலை சூரியன் உதிக்கிறதோ இல்லையோ நீ உதித்துவிடுகிறாய் மலையில் சூரியன் மறைந்தாலும் நீ மறைவதில்லை நள்ளிரவு வரை எங்களை விசிறிவிட்டு தூங்க வைத்து விட்டு தான் செல்கிறாய் எங்கள் குரலை எங்களுக்கே  கேட்க வைத்த சூரியன் பண்பலையே உன்னை மறப்போமா  >>>>>>>>>>>>>>>>>>>>>  அன்புடன்   ப. சதீஷ் வரலாறு பேராசிரியர்
ஐ விரல்  கோர்த்தேன் அவளுடன்  பத்து  விரலாக சேர்ந்தது ஆவலுடன்  சுற்றி பார்த்தேன் சுற்றத்தை, சேரவில்லை சேரவேண்டிய விரல்கள் சிதறி ஓடிய மாணிக்க பரல்களாக என் மானிட வாழ்க்கை வாழ்க்கை தத்துவம் பேசியோர் யோசித்தனர் நான் இருக்கிறேன்  என்றோர் நகர்ந்துவிட்டனர் முதல் வாரம்  ஒரு விருந்து அடுத்த வாரம் ஒரு விருந்து இப்படி இருந்து இருந்து அமர்ந்த விருந்து  மருந்தாய் கசந்தது உறவு சதை மட்டும் அல்ல உள்ளம் மட்டுமே என்று புரிவதற்குள் உருண்டோடியது மூன்று மாதங்கள் சோறு என்ற வார்த்தை மனதை சேறாக்கியது உறவுகள் என்ற பெயரில் முதல் மாதத்தில் இரண்டு சினிமா, இடையிடையே  செல்ல கோயில் பெண் கொடுத்தோர் உரிமை கொண்டாட பெண் எடுத்தோர் உரிமை கொண்டாடவில்லை \\ மூன்று மாதத்தில் உருவாக வேண்டிய முத்து ஆறு மாதத்திற்கு பிறகு உருவாக அதற்குள் கலகம் பல்லை  செதுக்கியது பாசம் என்னை பந்தாடியது நேசம் என் நெஞ்சை நக்கியது வாழ்க்கை  என் இருப்பிடத்தை மாற்ற கசங்கிய காகிதமாக நசுங்கியது மனம் தாயம் உருட்டியது  காலமோ அல்லது கடவுளோ என கலங்கிய வேளையில் தங்கமோ, வெள்ளியோ என பிறந்தது ஒரு பிள்ளை முத்துமணியாய் அ
பொறந்த வீடு போனவளே கறந்து கொண்டு வருவாய் என நினைப்பேன் என்று நினைத்தாயோ உயிர் உள்ளவரை என் உழைப்பில் உண்டு வாழ்வேனே தவிர  உன் உழைப்பில் மாட்டேன் ஒருவேளை  உயிர் என் உடம்பை  விட்டு சென்றால் என்னவோ தெரியவில்லை எனக்கு ப. சதீஷ்