ஐ விரல் கோர்த்தேன் அவளுடன் பத்து விரலாக சேர்ந்தது ஆவலுடன் சுற்றி பார்த்தேன் சுற்றத்தை, சேரவில்லை சேரவேண்டிய விரல்கள் சிதறி ஓடிய மாணிக்க பரல்களாக என் மானிட வாழ்க்கை வாழ்க்கை தத்துவம் பேசியோர் யோசித்தனர் நான் இருக்கிறேன் என்றோர் நகர்ந்துவிட்டனர் முதல் வாரம் ஒரு விருந்து அடுத்த வாரம் ஒரு விருந்து இப்படி இருந்து இருந்து அமர்ந்த விருந்து மருந்தாய் கசந்தது உறவு சதை மட்டும் அல்ல உள்ளம் மட்டுமே என்று புரிவதற்குள் உருண்டோடியது மூன்று மாதங்கள் சோறு என்ற வார்த்தை மனதை சேறாக்கியது உறவுகள் என்ற பெயரில் முதல் மாதத்தில் இரண்டு சினிமா, இடையிடையே செல்ல கோயில் பெண் கொடுத்தோர் உரிமை கொண்டாட பெண் எடுத்தோர் உரிமை கொண்டாடவில்லை \\ மூன்று மாதத்தில் உருவாக வேண்டிய முத்து ஆறு மாதத்திற்கு பிறகு உருவாக அதற்குள் கலகம் பல்லை செதுக்கியது பாசம் என்னை பந்தாடியது நேசம் என் நெஞ்சை நக்கியது வாழ்க்கை என் இருப்பிடத்தை மாற்ற கசங்கிய காகிதமாக நசுங்கியது மனம் தாயம் உருட்டியது காலமோ அல்லது கடவுளோ என கலங்கிய வேளையில் தங்...
Posts
Showing posts from September, 2019