ஐ விரல்  கோர்த்தேன்
அவளுடன்  பத்து  விரலாக
சேர்ந்தது
ஆவலுடன்  சுற்றி பார்த்தேன்
சுற்றத்தை, சேரவில்லை
சேரவேண்டிய விரல்கள்
சிதறி ஓடிய மாணிக்க பரல்களாக
என் மானிட வாழ்க்கை

வாழ்க்கை தத்துவம் பேசியோர்
யோசித்தனர்
நான் இருக்கிறேன்  என்றோர்
நகர்ந்துவிட்டனர்

முதல் வாரம்  ஒரு விருந்து
அடுத்த வாரம் ஒரு விருந்து
இப்படி இருந்து இருந்து
அமர்ந்த விருந்து  மருந்தாய் கசந்தது

உறவு சதை மட்டும் அல்ல
உள்ளம் மட்டுமே என்று புரிவதற்குள்
உருண்டோடியது மூன்று மாதங்கள்
சோறு என்ற வார்த்தை மனதை சேறாக்கியது


உறவுகள் என்ற பெயரில் முதல் மாதத்தில்
இரண்டு சினிமா, இடையிடையே  செல்ல கோயில்
பெண் கொடுத்தோர் உரிமை கொண்டாட
பெண் எடுத்தோர் உரிமை கொண்டாடவில்லை \\

மூன்று மாதத்தில் உருவாக வேண்டிய முத்து
ஆறு மாதத்திற்கு பிறகு உருவாக
அதற்குள் கலகம் பல்லை  செதுக்கியது
பாசம் என்னை பந்தாடியது

நேசம் என் நெஞ்சை நக்கியது
வாழ்க்கை  என் இருப்பிடத்தை மாற்ற
கசங்கிய காகிதமாக நசுங்கியது மனம்
தாயம் உருட்டியது  காலமோ அல்லது

கடவுளோ என கலங்கிய வேளையில்
தங்கமோ, வெள்ளியோ என பிறந்தது
ஒரு பிள்ளை முத்துமணியாய்
அடிக்கடி மணியடிக்கும் நம்பிக்கை

பிறந்த யோகம் வேலை நிரந்தரமாக
வந்து சேர்ந்த இடமோ பிறப்பிடம்
இதற்குள் ஓடிவிட்டது பத்து வருடம்
வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கிறேன்

என்று மட்டும் எனக்கு புரிந்தது
இதற்கு பத்து வருடமா என நான்
வியக்கும் வேளையில்  சுற்றம் என்னை
சுற்றி வளைத்தது

நான் வாழ்க்கையில் வாழ வில்லை என்று
மட்டும் நன்றாக புரிந்தது
வாழ்க்கை  தான்  என்னை \\\
வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது

யாரை நம்புவது என்று தெரியாமல்
வேலை மட்டுமே வாழ்க்கை என்று
ஓட்ட  ஆரம்பித்தேன் படகை
கரை தேட தேட துடுப்பே
பாரமாகியது 
  
துடுப்பே பாரம் என்ற கடுப்பில் 
என் பயணம் அடுப்பில் புகையும் 
விறகாய்  வேக 
 
நாட்கள் மட்டும் நொடி முள்ளாய் 
நகர நகர,  பகடை காய் போல் 
வாழ்க்கை உருண்டது 

உருண்ட  பக்கமெல்லாம்  நடிப்பு 
நாடகம்,   
பாசம், பாசாங்கு  காட்டியது 
மனதுக்கு ஆறுதலாய்  மகன் 

ஒரு சில மாணவர்களின் உதவியில் 
மண் ஒன்று வாங்க, தாயின் கையால் 
முன்பணம் கொடுக்க தாரத்தின் 
மனதில்சிறிது தடுமாற்றம் 
 
நானா நீயா என்ற பாச பந்த 
போராட்டத்தில்,  கால் பந்தாய் நான் 
ஒரு கட்டத்தில்  தாய் வேஷம் பெரிய, நடு 
மகள்களின் சதிராட்டம்  உணர்தேன் 
 
பெத்த தாயா நமக்கு துரோகம் 
செய்வாள் என நம்ப , கொரோனா 
விடுமுறை வீட்டில் நடப்பதை 
கண்முன்னே உண்மை என்றது
 
கொரோனா  முன்னே 
சொத்தெல்லாம் தாய் பெயரில் 
தகப்பன் எழுதிவைத்து 
உயிர் விட்ட பின் 

உயிர் எடுத்தபழிக்கு 
ஆளான என் மனம் 
நொந்து ஆறுவதுற்குள் 
அவதாரம்





Comments

Popular posts from this blog