அப்பா நாட்டிற்காக உழைத்தாய் நற்குணங்களை பெற்றாய் அதிகாலை எழவைத்து பாட புத்தகங்களை புரட்ட வைத்தாய் தேய்த்து குளிப்பாட்டி வைத்தாய் பள்ளிக்கு அழைத்து சென்று கல்லூரி படிகட்டை மிதிக்கவைத்து குறைந்த வருவாயில் துணி மணி தைத்து கொடுத்து , கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து வேலைக்கு அழைத்து சென்று பணியில் சேரவைத்தாய் திருமணம்(ரணம்) செய்துவைத்து குடும்ப பொறுப்பை உணரவைத்தாய் பிரிவு என்றால் என்ன என உணரவைத்து தெய்வமாகிவிட்டாய் தந்தையே விழுதுகள் மண்ணை தொடும் வரை வாழ்ந்த நீ துளிர் விட்டபோது வீழ்ந்து விட்டாயே கொலைகார பாவி என்ற பட்டத்தை கொடுத்துவிட்டு ??????????????????????????????? ============ ப. சதீஷ் ======================