Posts

Showing posts from 2013
கத்தி கத்திக்கு மட்டும் வாய் இருந்தால் கத்தி கத்தி சொல்லியிருக்கும் சுத்தி சுத்தி வந்திருக்கும் புத்தியில் உறைக்கும்படி என்னை ரத்தத்தில் தேய்க்காதே என்று
தாய் உரமிழந்த உணர்வுகளுக்கு உரமிட்டவளே தட்டில் இட்டலி சட்டினி வைத்து தன்னை பட்டினி இட்டு கொண்டவளே உண்ண மறுத்துவிட்டால் உப்பில்லையோ  என சப்பு கொட்டி அடுத்த வேலை உணவை அழகுடன் பரிமாறியவளே கைமாறு உண்டோ நீ செய்த தியாகத்திற்கு ஆராரோ  பாட நான் தாய் அல்ல உன் சேய் நான் அழுகிறேன் உண் அருமை எண்ணி
பூவைக்கு பூவை சூட பூப்போல் பூவாய் வந்தேன் பூவையே பூப்போல் பூவாய் நின்றாய் பூவை சூடாமல் பூபோலவே திரும்பினேன்
நான் வசித்தபோது கிடைக்காத இந்த ராகம் எனக்காகவே வாசித்தபோது ஏற்று கொள்வதற்கில்லை ஏன் மனம் அட  காதல்
வாழ்ந்தால் வருவது வரலாறு அல்ல நீ வீழ்ந்தாலும் வாழவேண்டும் அதுதான் வரலாறு
சாதிக்க  பிறந்தவர்களை சாதிக்கு பிறந்தவர்கள் என்று சாதிக்க துடிக்கும் மூடர்களே இவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று சொல்லி பாருங்கள்
உறவுகளால் நொந்த  எனக்கு விறகுகள் தேவையில்லை சிறகுகள் போதும் வேகுவதற்கு 
என்னவோ  தெரியவில்லை சிக்னலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரனுக்கு கிரீன்  கலர் மட்டும் பிடித்தது  இல்லை

kavithai

முரண்பாடு உயிர்  காக்கும்  வாகனம் சாலையில் அடிபட்ட ஒருவனின் உயிரை காக்க விரைந்து சென்றது சாலையில் நடந்து  சென்ற ஒருவனின் உயிரை எடுத்துவிட்டு
முத்து முத்து மழை துளியே நீ  சொட்டு சொட்டாய்  விழுந்தாயே குட்டி குட்டி  மழையே நீ  பொட்டு  பொட்டாய் நனைதாயே துள்ளி துள்ளி  எழுந்தாயே தள்ளி தள்ளி  சென்றாயே

lyrics new

அலை  கொஞ்சும்  அழகிய  கடலே தலை  கோதும் இளகிய  காற்றே உனை  தேடி  வந்தேன் என்  உள்ளம்  தந்தேன் எனக்கென  என்ன தந்தாய்
i love my life because i love my wife sometimes she is a knife Worries Invited For Ever or Wisdom Invited For Ever