Posts

Showing posts from 2019
இசையே இசையே உனக்கு இன்னொரு பெயர் சூரியன் F. M  ஆ  ? அடிக்கடி எங்கள் நெஞ்சத்திடம் அன்பு செய்து  நாணல்  தொடுக்கிறாய் இசை மழையை  பொழியும்  பண்பலையே பசைபோல் ஒட்டிக்கொள்ளும்  காற்றலையே ஒவ்வொரு நிமிடமும்  எங்களை விசை தொடுக்கிறாய் கசை அடி  விழுந்தாலும் எங்களின் தசை நார் கிழிந்தாலும் விலக மாட்டோம் உன்னை விட்டு காலை சூரியன் உதிக்கிறதோ இல்லையோ நீ உதித்துவிடுகிறாய் மலையில் சூரியன் மறைந்தாலும் நீ மறைவதில்லை நள்ளிரவு வரை எங்களை விசிறிவிட்டு தூங்க வைத்து விட்டு தான் செல்கிறாய் எங்கள் குரலை எங்களுக்கே  கேட்க வைத்த சூரியன் பண்பலையே உன்னை மறப்போமா  >>>>>>>>>>>>>>>>>>>>>  அன்புடன்   ப. சதீஷ் வரலாறு பேராசிரியர்
ஐ விரல்  கோர்த்தேன் அவளுடன்  பத்து  விரலாக சேர்ந்தது ஆவலுடன்  சுற்றி பார்த்தேன் சுற்றத்தை, சேரவில்லை சேரவேண்டிய விரல்கள் சிதறி ஓடிய மாணிக்க பரல்களாக என் மானிட வாழ்க்கை வாழ்க்கை தத்துவம் பேசியோர் யோசித்தனர் நான் இருக்கிறேன்  என்றோர் நகர்ந்துவிட்டனர் முதல் வாரம்  ஒரு விருந்து அடுத்த வாரம் ஒரு விருந்து இப்படி இருந்து இருந்து அமர்ந்த விருந்து  மருந்தாய் கசந்தது உறவு சதை மட்டும் அல்ல உள்ளம் மட்டுமே என்று புரிவதற்குள் உருண்டோடியது மூன்று மாதங்கள் சோறு என்ற வார்த்தை மனதை சேறாக்கியது உறவுகள் என்ற பெயரில் முதல் மாதத்தில் இரண்டு சினிமா, இடையிடையே  செல்ல கோயில் பெண் கொடுத்தோர் உரிமை கொண்டாட பெண் எடுத்தோர் உரிமை கொண்டாடவில்லை \\ மூன்று மாதத்தில் உருவாக வேண்டிய முத்து ஆறு மாதத்திற்கு பிறகு உருவாக அதற்குள் கலகம் பல்லை  செதுக்கியது பாசம் என்னை பந்தாடியது நேசம் என் நெஞ்சை நக்கியது வாழ்க்கை  என் இருப்பிடத்தை மாற்ற கசங்கிய காகிதமாக நசுங்கியது மனம் தாயம் உருட்டியது  காலமோ அல்லது கடவுளோ என கலங்கிய வேளையில் தங்...
பொறந்த வீடு போனவளே கறந்து கொண்டு வருவாய் என நினைப்பேன் என்று நினைத்தாயோ உயிர் உள்ளவரை என் உழைப்பில் உண்டு வாழ்வேனே தவிர  உன் உழைப்பில் மாட்டேன் ஒருவேளை  உயிர் என் உடம்பை  விட்டு சென்றால் என்னவோ தெரியவில்லை எனக்கு ப. சதீஷ்
நீ தாகம் கொண்டு தலை நிமிர்ந்ததில் நீர் குவளை குனிந்தது தலை நீர் துளிகள் ஈரப்படுத்தியது உன் நாவை மட்டுமில்லை என் மனத்தையும்தான்  P. SADISH
கற்கள்  உருவம் பெற்றவுடன் உயிர் பெற்றுவிடுகின்றன கடவுள்  என்ற பெயருடன் மனிதன் மட்டும்  உயிர் பெற்றதில்லிருந்து கல்லாக உருவம் மாரிகொண்டிருக்கிறான்
லட்ச லட்சம் பேர் தேர்வு எழுதினர் லட்சம் கொடுத்தவர்களுக்கு மட்டும் வேலையாம் லட்சத்தில் சொச்சம் வைத்தவர்களுக்கு காத்திருப்பு  பட்டியல் திறமையை  நம்பி எழுதியவர்களுக்கு வறுமை மட்டும் மிச்சம்