தாய்

உரமிழந்த உணர்வுகளுக்கு உரமிட்டவளே
தட்டில் இட்டலி சட்டினி வைத்து
தன்னை பட்டினி இட்டு கொண்டவளே
உண்ண மறுத்துவிட்டால்
உப்பில்லையோ  என சப்பு கொட்டி
அடுத்த வேலை உணவை
அழகுடன் பரிமாறியவளே
கைமாறு உண்டோ
நீ செய்த தியாகத்திற்கு
ஆராரோ  பாட நான் தாய் அல்ல
உன் சேய் நான்
அழுகிறேன் உண் அருமை எண்ணி

Comments

Popular posts from this blog